1.
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்த்திடலாம்
2.
சிலுவையை சுமப்பதனால்
சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதி வரும். – உன்னையே
3.
பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
சுயமது மறையட்டுமே – உன்னையே
4.
நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார் – உன்னையே
5.
சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார் – உன்னையே
6.
தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை
நம்மில் இருக்கட்டுமே – உன்னையே